வாடிப்பட்டி: வாடிப்பட்டியை அடுத்த போடிநாயக்கன்பட்டியில் உள்ள விநாயகர், பகவதி, காளி, முத்தாலம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜன.23ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. அன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு நாட்டான்மைகாரர் தெரு, தாதம்பட்டி இரட்டை பிள்ளையார் கோயில், சந்தை பாலம் வழியாக கோயில் யாக சாலை வந்தடைந்தது.
ஜன. 24ல் 108 மூலிகைகளைக் கொண்டு சிறப்பு மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை நவகிரக ஹோமம், கோ பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நடன நிகழ்ச்சி நடந்தது.