உத்தரகோசமங்கை கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2021 03:07
உத்தரகோசமங்கை, : உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது.மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற ஸ்தலமாகஉத்தரகோசமங்கை விளங்கி வருவதால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. மூலவர்மாணிக்கவாசக பெருமானுக்கு 23 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. காலை முதல் மாலை வரை திருவாசகம் முற்றோதல், சிவபுராணம் பாடப்பட்டது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.