வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. ராஜபாளையம் சிவபக்தர்கள் மாணிக்கவாசகருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். திருவாசகம் பாடப்பட்டது. அன்னதான ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்திருந்தார்.