அழகர்கோவில் ஆடி திருவிழா பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2021 09:07
அலங்காநல்லுரர்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உட்பிரகாரகத்தில் நடக்கும் ஆடி பிரமோற்சவ திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்விழா இன்று (ஜூலை 15) துவங்கி ஜூலை 26 வரை நடக்கிறது.இதில் ஜூலை 16 மற்றும் 24 தவிர மற்ற நாட்களில் காலை 6 முதல் 11மணி, மாலை 3:30 முதல் 6:30 மணிவரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி உண்டு.நாளை (ஜூலை 16) விழா கொடியேற்றத்தின் போது காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள்.ஜூலை 24 ஆடி பவுர்ணமி பிரமோற்சவ தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அன்று காலை 6 முதல் 2மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு.அரசின் உத்தரவு வரும்வரை கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்க, நுரபுர கங்கை தீர்த்தத்தில் குளிக்க, கிடா வெட்டி பொங்கல் வைக்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.