மேட்டுப்பாளையம்: சிறுமுகை அடுத்த அன்னதாசம்பாளையத்தில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜர் சிவகாம சுந்தரிக்கு, 21 வகை அபிஷேக பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து சிறுமுகை, கிருஷ்ணா நாட்டியாலயா பிருந்தா குமாரின் நடன குழுவினர், சலங்கை பூஜை செய்தனர். நடராஜர் சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் கோவில் தர்மகர்த்தா சண்முகசுந்தரம் மற்றும் கோவில் கமிட்டியினர், மாத கட்டளைதாரர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.