திருப்பதி : திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சுமார் 40 வருடங்கள் இருந்ததை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும் போது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை ஏழுமலையானுக்கும் , தாயார்க்கும் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம் அதை முன்னிட்டு இன்று 16.07.2021 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு பி.கே .சேகர்பாபு , துறை செயலளர் திரு சந்திரமோகன் IAS , துறை ஆணையாளர் திரு ஜெ. குமரகுருபரன் IAS , ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஸ்ரீரங்கம் திகோயில் திரு செ.மாரிமுத்து , அர்ச்சகர் சுந்தர் பட்டர் ,கண்காணிப்பாளர் வேல்முருகன் , திருப்பதியில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீ நாராயணஜீயர் மடத்தின் பொறுப்பாளர் திரு.ராஜா ரெட்டி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்கள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை எடுத்துக் கொண்டு நான்கு திருமடவீதிகளை வலம் வந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி திரு .ஜவகர்ரெட்டி , இணை நிர்வாக அதிகாரி திரு.தர்மா ரெட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தனர் பின்பு ஏழுமலையாளனுக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது .