செஞ்சி : கவரை கிராமத்தில் ஜடாமுனீஸ்வரர் மற்றும் பொறையாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி அடுத்த கவரை கிராமத்தில் பழமையான ஜடாமுனீஸ்வரர் மற்றும் பொறையாத்தம்மனுக்கு புதிதாக கோவில்கள் கட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜையும், சுவாமி சிலைகள் பிரதிஷ்டையும் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:50 மணிக்கு கடம் புறப்பாடும், 10:10 மணிக்கு ஜடாமுனீஸ்வரர், பொறையாத்தம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.