அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வடுகர் கோட்டை கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மந்தை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் முதல் கால யாக பூஜை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தம்பதி பூஜை நடந்தது. திருமுறை மகா பாராயணம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 4:00மணிக்கு புண்ணியாகவசனம், இரண்டாம் கால பூஜைகள், மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்ன தானமும் நடந்தது.