கொரோனா நீங்க சீர்காழி சட்டநாதர் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2021 10:07
சீர்காழி : சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உலக நன்மைக்காக, தீயசக்திகள், கொரோனா நீங்கிட வேண்டி பாசுபதாஸ்திர ஹோமம் நேற்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உலக நன்மைக்காகவும், கொரோ னா தொற்றும் நீங்கிடவும் பாசுபதாஸ்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு அதன் முன்னர் குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டு 13 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கிட சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் புனித நீரால் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். தொடர்ந்து மலைமீது அருள்பாலிக்கும் சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், உமாமகேஸ்வரி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டிலும், தைலகாப்பு, திருஞானசம் பந்தர் பெருமானுக்கு நடந்த வழிப்பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, காங்கிரஸ் மாநில பொது செயலா ளர் கணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.