மேலூர் அருகே சூவாஞ்சான்பட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு ஜூலை 14 யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.புலிமலைப்பட்டி செல்வ சித்தி விநாயகர், கண்மாய்பட்டி வப்பாரி அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.