பாலமேடு அருகே அரசம்பட்டியில் நாகம்மாள், பச்சை நாச்சியம்மன், ஆண்டிச்சாமி, கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 14 ல் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று சிறப்பு தீபாராதனைக்கு பின் சிவாச்சார்யார் நல்லுச்சாமி புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.