காரியாபட்டி : காரியாபட்டி பெரிய ஆலங்குளத்தில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருணாச்சல ஈஸ்வரர், ஆனந்த நாயகி அம்மன் கோயில். இங்குள்ள கருவறையில் சிவன், பார்வதி திருமணக்கோலத்தில் உள்ளனர். இது போன்ற அமைப்பு கோயில் வேறு எங்கும் இல்லை. காலப்போக்கில் இக்கோயில் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடந்த நிலையில், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகளை நடக்க 300 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.