பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2021 02:07
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. 120 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை 5:30 மணி அளவில் நடந்தது. தர்காவில் மவுலீது எனும் புகழ்மாலை ஓதப்பட்டது. தர்கா வளாகத்தில் உள்ள 50 அடி உயரமுள்ள மினராவில் கொடியேற்றம் நடந்தது. அச்சமயத்தில் கொடிக்கு மலர்கள் தூவி வாழ்த்து கோஷங்களை முழங்கினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். விழாவில் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.