கோயம்புத்துார் அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. அந்த காலத்தில் இந்த ஊரில் தங்கியிருந்த வீரர்களை பிளேக் என்னும் கொடியநோய் வாட்டியது. அவர்கள் அம்மனின் தீர்த்தம் பருகி குணம் அடைந்தனர். அன்று முதல் இந்த அம்பாளுக்கு குணபூரணி என்றும் பெயர் ஏற்பட்டது. அன்னம் தரும் அம்பிகையை அன்னபூரணி என்பது போல நோய் தீர்க்கும் அம்மனை குணபூரணி என்பதும் பொருத்தம் தானே!