நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மூகாம்பிகையில் கடந்த 12ம் தேதி தொடங்கிய 18 வது ஆண்டு ராம நவமி ரத யாத்திரை கன்னியாகுமரி வந்தடைந்தது. 15 துறவிகளுடன் பயணம் மேற்கொண்ட இந்த யாத்திரை காலை கன்னியாகுமரி காந்திமண்டபம் முன்பு வந்தடைந்தது. பின்னர் இந்த யாத்திரை திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரம் அருகே செங்குட்டுக்கோணத்தில் நிறைவடைகிறது. நாடு செழிக்கவும், நாட்டு மக்கள் நலமாக வாழவும், மும்மாரி மழை பெய்யவும், விவசாயம் மற்றும் இயந்திர தொழில் பெருகவும், மாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி பெறவும், பெண்கள் நலமாக இருக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது ஆண்களின் கடமை என்கின்ற உணர்வுகளை உருவாக்கவும் வேண்டி கடந்த 18 ஆண்டுகளாக இந்த ரத யாத்திரையை நடத்தி வருவதாக துறவிகள் தெரிவித்தனர்.