நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும்.
விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை கூடை கூடையாக கெண்டு வந்து பூச்சொரிதல் நடத்துவார்கள். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஊர்வலமாக பூக்களை எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தியது. எனவே, நேற்று நத்தம் பகுதி பூ விவசாயிகள் மல்லிகை, ரோஜா, முல்லை, சம்பங்கி, பிச்சி, செவ்வந்தி, அரளி பூக்களை கூடைகளில் கொண்டு வந்து முறைப்படி மாரியம்மன் கோயிலில் அளித்தனர். அம்மனுக்கு வண்ணப்பூக்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.