கோட்டை அம்மன் கோயில் ஆடிவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2021 06:07
தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வம் கோட்டை அம்மன் கோயில் ஆடிவிழா துவங்கியது. நேற்று முன்தினம் ஆற்றங்கரை அருகே உள்ள ஆதி கோட்டை அம்மன் கோயிலில் இருந்து புற்றுமண் எடுத்து வந்து கோட்டை அம்மன் கோயிலில் மேடைபோடப்பட்டு பூஜைகள் நடந்தன. ஆடி முதல் செவ்வாய் ஆன நேற்று சிறப்பு அலங்காரம் செய்விக்கபட்டு காப்பு கட்டுதலுடன் ஆடி விழா துவங்கியது. வழக்கமான அபிஷேகம் நேரங்களில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பர். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கூட்டமின்றி சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் பொங்கல் மட்டும் வைக்கப்படும். கோயிலில் நடைபெறும் அபிஷேகங்கள் பூஜைகள் சமூக வலைதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.