இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடிமாதம் கடைசி பெருந்திருவிழா சுவாமி ஊர்வலம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2021 06:07
சாத்துார்: இருக்கன் குடி மாரியம்மன் கோவில் ஆடிமாதம் கடைசி வெள்ளிப் பெருந்திருவிழா சுவாமி ஊர்வலம் கொரோனா காரணமாக இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருக்கன் குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஒ.புஷ்பா தலைமை வகித்தார். தாசில்தார் வெங்கடேஷ், டி.எஸ்.பி. நாகராஜன் முன்னிலை வகித்தனர். இருக்கன் குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாகரன், முன்னாள் கோவில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து பரவி வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவு படி இந்தாண்டும் ஆடிப் பெருந்திருவிழா அன்று நடை பெறும் சுவாமி ஊர்வலம் ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தினமும் இரவு 8:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இரவு 8:00 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் ஆடு, கோழி வெட்ட அனுமதியில்லை கோவில் மண்டபங்களில் விருந்து விழா நடத்த அமைதி இல்லை. பக்தர்கள் சமுக இடைவெளியை கடைபிடிக்காமலோ, பெருந்தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டால் பொது தரிசனம் ரத்து செய்ய நேரிடும் . என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.