ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடி தேரோட்டம்; நடவடிக்கை எடுக்கலாமே ஹிந்து அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2021 06:07
ஸ்ரீவில்லிபுத்தூர் : கொரோனா காரணமாக 2020ல் நிறுத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இந்தாண்டு நடக்க, ஹிந்து அறநிலையத்துறை முயற்சிக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்திலே ஸ்ரீவி.,ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதில் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுப்பர். கொரோனா தொற்று காரணமாக 2002ல் தேரோட்டம் நடக்கவில்லை. கோயில் வளாகத்திலே தங்கத்தேர் மட்டுமே இழுக்கப்பட்டது.இந்தாண்டு ஆகஸ்ட் 3ல் கொடியேற்றுடன் ஆடிப்பூர விழா துவங்கும் நிலையில் 11ம் தேதி தேரோட்டம் நடக்கும். ஆனால் ஊரடங்கு தளர்வு படிபடியாக அறவிக்கப்பட்டும் கோயில் திருவிழாக்கள் மட்டும் நடத்த அனுமதிக்கவில்லை. இந்தாண்டு தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் எழுந்துள்ளது.கோயில் செயல் அலுவலர் இளங்கோவன்: தேரோட்டம் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டு, அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம்,என்றார்.