திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆடிமாதத்தையொட்டி கூழ் வார்த்தல் திருவிழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கெங்கையம்மனுக்கு நாகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொப்பறையில் கூழ் ஊற்றி அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.