பழநி: பழநி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. பழநி, பெரிய ஆவுடையார் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதைப்போலவே இடும்பன் கோவில், ஆயக்குடி சோளீஸ்வரர் கோயில், மலைக்கோயில், கைலாசநாதர் கோவில், திருஆவினன்குடி , அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பட்டத்து விநாயகர் கோயில் ஆகியவற்றில் பிரதோஷ விழா சிறப்பாக வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சமூக விலகளுடன் கலந்து கொண்டனர்.