பதிவு செய்த நாள்
22
ஜூலை
2021
04:07
சேலம்: பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவங்களில் ஏதேனும் குறை இருந்தால் நிவர்த்தி செய்ய, ஜேஷ்டாபிஷேகம் உற்சவம் நடத்தப்படும். அதன்படி, சேலம், பொன்னம்மாபேட்டை, மன்னார்பாளையம் பிரிவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சயன ஏகாதசியான நேற்று, மூலவர் நரசிம்மருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டது. அதையொட்டி, கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. நரசிம்மர், பெருமாளுக்கு, பால், தயிர், கரும்புச்சாறு உள்பட, 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கலச புனிதநீரால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.