பதிவு செய்த நாள்
22
ஜூலை
2021
04:07
புதுச்சேரி,-பக்ரீத் பண்டிகையையொட்டி, புதுச்சேரி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.உலகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் முல்லா வீதி, பெரியக்கடை, நெல்லித்தோப்பு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.பள்ளிவாசல் வந்த இஸ்லாமியர்களுக்கு, உடல்வெப்ப பரிசோதனை செய்து, அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீளவும், மக்கள் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. தொழுகைக்கு பிறகு, இஸ்லாமியர்கள், பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு குர்பானி விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.