திண்டுக்கல் : கொரோனாவால் சில மாதங்களாக திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பவுர்ணமி கிரிவலம் நடக்கவில்லை. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பரவலை தடுக்க பக்தர்கள் அதிகளவில் கூட அனுமதியில்லை என்பதால் நாளை (ஜூலை 23) ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.