திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா ஜூன் 24ல் தொடங்குகிறது. ஜூலை 2 வரை, இரவு 7 மணிக்கு திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் உற்சவர் சுப்பிர மணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். முப்பது நிமிடங்கள் ஊஞ்சல் ஆட்டம் நடைபெறும். ஜூலை 3ல் உச்சிகால பூஜையின்போது, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் உற்சவர் சன்னதிகளில் மா, பாலா, வாழை என முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.