புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2021 10:07
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நாளை குரு பூர்ணிமா விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், குரு பூர்ணிமா விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படும், நாளை குரு பூர்ணிமாவை முன்னிட்டு, விழாவில் மாணவர்களின் குருவணக்க பாடல், இசைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, நாளை காலை 8.00 மணிக்கு வேதம், 8.25 மணிக்கு குரு வந்தனம், 9.00 மணிக்கு ஸ்ரீசத்யசாய் டிரஸ்ட் பற்றிய முன்னுரை மற்றும் இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவனம் தலைவர் ஸ்ரீ K சக்கரவர்த்தி அவர்கள் துவக்க உறையாற்றுகிறார். தொடர்ந்து இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவனம் துணை தலைவர் நிமிஷ் பாண்டயா உரையாற்றுகிறார். 9.30 மணிக்கு வீடியோ விளக்கக்காட்சி, 10.00 மணிக்கு பஜனை மற்றும் ஆரத்தி வழிபாடு நடைபெற உள்ளது. மாலை 5.55 மணிக்கு சிறப்பு இசை நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு பஜனை மற்றும் ஆரத்தி வழிபாட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் பிரசாந்தி நிலையம் உள்ளீட்ட முக்கிய பகுதிகள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.