ஆடி பவுர்ணமி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2021 10:07
சதுரகிரி : ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஜூலை 21ம் தேதி முதல் 24 ஆம் தேதி முடிய 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை முன்னிட்டு தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இன்று (23ம் தேதி) ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். இருந்தபோதிலும் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.