சத்திய யுக சிருஷ்டி கோவிலில் அம்மன் கூல் வழங்கும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 11:07
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையை வளாகத்திற்குள் உள்ள சத்திய யுக சிருஷ்டி கோவிலில் உள்ள மாரியம்மன், காளியம்மன், கருமாரியம்மன் உட்பட அம்மன் சிலைகளுக்கு ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதையடுத்து கோயில் வளாகத்தில் கூல் காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கோவிலின் தலைமை நிர்வாகி வெங்கட்ராமன் தலைமையில் திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைத்து பொதுமக்களுக்கு ஆடிமாத அம்மன் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.