ஆடி சனி: திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 04:07
காரைக்கால்: காரைக்காலில் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். பகவானை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நோய் தொற்று காரணமாக சரியானமுறையில் கோவிலுக்கு பக்தர்கள் வருவதில்லை இதனால் தற்போது இயல்புநிலை திரும்பும் நிலையில் இன்று ஆடி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைப் புரிந்தனர்.
முன்னாக வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களை ஆலயத்தில் அனுமதித்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். மேலும் நளன்குளத்தில் பக்தர்களுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டது.மேலும் எஸ்.பி. ரகுநாயகன் தலைமையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.