மானாமதுரை : கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடி முளைக்கொட்டு உற்ஸவம், கஞ்சிக்கலய ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மானாமதுரையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான முளைப்பாரிஓடுகள், கஞ்சிக்கலயங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரையில் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.தற்போது கொரோனா தொற்று காரணமாக மண்பாண்டப் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக முடங்கியுள்ளது.வருடந்தோறும் ஆடியில் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோயில்களில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைக்கொட்டு உற்ஸவம், கஞ்சிக்கலய ஊர்வலங்கள் நடைபெறும்,ஆனால் தற்போது கொரோனா தொற்றால் ஆடி திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முளைப்பாரி ஓடுகள், கஞ்சிக்கலயங்கள் பெருமளவில் தேக்கமடைந்து உள்ளன.