முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் தம்புராட்டி அம்மன் கோயில் முளைக்கொட்டு விழாவையொட்டி பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர். முருகன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக தம்புராட்டி அம்மன் கோயில் வந்தனர். அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் நடந்தது.