பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஊஞ்சல் உற்சவத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, இக்கோவில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில், லட்சுமி நரசிம்ம பெருமாள், தாயார்களுடன், ஊஞ்சல் உற்சவத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.