பதிவு செய்த நாள்
04
ஆக
2021
05:08
தொண்டாமுத்தூர்: பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், வாய்க்கால் மற்றும் குளங்களில் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர்.
கோவையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நேற்று பேரூர் படித்துறையில், தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், வழக்கமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்யும் பொதுமக்கள், பல்வேறு நீர் நிலைகளில் நேற்று தர்ப்பணம் செய்தனர். கூடுதுறை நொய்யல் ஆறு, சித்திரைச்சாவடி தடுப்பணை, கீழ் சித்திரைச்சாவடி வாய்க்கால், மாதம்பட்டி நொய்யல் ஆறு, வேடபட்டி புதுக்குளம், கோளாரம்பதி குளம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான பொதுமக்கள், படையல் வைத்து முன்னோர்களை வழிபட்டு சென்றனர். பேரூர் படித்துறைக்கு அருகில் கோளாரம்பதி குளம் உள்ளதால், அங்கே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால், அங்கு, சாலையோர கடைகள் அமைத்து, வழிபாட்டிற்கு தேவையான கூழாங்கல், கற்பூரம், விளக்கு, தாழைமடல் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டது.