மேட்டுப்பாளையம்: சிறுமுகையை அடுத்த கிச்சகத்தூரில் உள்ள, விருட்ச பீடத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடந்தது. விருட்ச பீடத்தில் காலை விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, 27 நட்சத்திர அதிதேவதைகள், சித்தர்கள், நவ கிரக அதிதேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள், ஆதிபராசக்தி லிங்கம் என்னும் பாதாள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சுமி தாசன் சுவாமி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.