பதிவு செய்த நாள்
05
ஆக
2021
04:08
திருப்போரூர்: தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று, சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால், கோவில் விழாக்களை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில், ஆடி மாத பரணி கிருத்திகையில் ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இம்மாதம் 1, 2, 3ம் தேதிகளில் மூடப்பட்ட கோவில் நடை, மூன்று நாளைக்கு பின், நேற்று திறக்கப்பட்டது. கோவில் திறந்ததை அறிந்த பக்தர்கள், நான்கு மற்றும் 16 கால் மண்டபம் அருகே, குழந்தைகளுக்கு காதுக் குத்தினர். காவடி எடுத்து, மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.