திண்டிவனம் : திண்டிவனம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள சாய்பாபா கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு கோயிலில் இருக்கும் கற்பகவிநாயகருக்கு சந்தனகாப்பும், ரேணுகாம்பாளுக்கு சந்தனகாப்புடன் கண்ணாடி வளையல்கள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.