பிறருக்கு உதவி செய்தால்தான் உலகம் நம்மை மதிக்கும். பெரிய மேதையாக இருந்தாலும் உதவி செய்யவில்லை என்றால் கஞ்சன் என்றுதான் சொல்வார்கள். * எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். * கஞ்சனாக வாழ்ந்துவிட்டு மரணவேளையில் வள்ளலாக மாறினாலும் பயன்இல்லை. * தொழுகை செய்பவராக இருந்தாலும் கஞ்சனாக இருந்தால் பாவியாவான். * கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் உள்ளவன் தங்குமிடம் நரகம். * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய குணங்கள் ஒருவனை நாசப்படுத்தும். * தர்மம் செய்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். சிக்கனம் தற்போது அவசியம்தான். ஆனால் கஞ்சத்தனமாக இருக்காதீர்கள். உதவி செய்து பிறரின் அன்பை பெறுங்கள்.