மக்களிடம் அன்பு செலுத்தும் அரசர் ஒருவருக்கு குழந்தை செல்வம் இல்லை. தன்மீது அன்பு கொண்ட ஒருவரை தத்தெடுக்க விரும்பினார். மக்களுக்காக பொருட்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து, தங்களுக்கு விருப்பமானதை எடுத்துச் செல்லலாம் என அறிவித்தார். பார்வையிட வந்த மக்கள் அனைவரும் பொருட்களை அள்ளிச்சென்றனர், ஒரு சிறுவனைத்தவிர. அரசர் அச்சிறுவனை பார்க்க, அவனோ அவரை ஓடிவந்து கட்டிக்கொண்டான். அவனே தன் வாரிசாக அறிவித்தார். இதனைப் பார்த்த மக்கள், அரசர் மீது அன்பு வைக்காமல், அவருடைய பொருளின் மீது ஆசை வைத்தோமே என தலைகுனிந்தனர். நாமும் எல்லோரிடமும் அன்பாக இருப்போம்.