வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை சுந்தரமகாலிங்கம் சன்னிதியில் பிரதோஷ சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் தாணிப்பாறை மலை அடிவாரம் வெறிச்சோடி காணப்பட்டது. போலீஸ், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.