திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் தமிழில் அர்ச்சனை போர்டுகள் வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2021 04:08
திருப்புல்லாணி: ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை உள்ளிட்ட பழமையும், புரதான சிறப்பும் பெற்ற கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. நடை சாத்தப்பட்ட கோயிலின் முன்புறம் இந்து சமய அறநிலையத்துறை என்று தலைப்பிட்டு,
அன்னை தமிழில் அர்ச்சனை - "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற வாசகங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே அர்ச்சகரின் பெயர், விபரம், அலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.