முறையூர்: சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் செல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இருவருக்கும் வளையல்களை கொண்டு தனித்தனியாக அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானமும், கிராம மக்கள் செய்திருந்தனர். பூஜைகளில் கோயில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.