18ம் படி கருப்பண்ணசாமி கோயிலுக்கு 200 கிலோ ராட்சத அருவா நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 10:08
திருப்புவனம் : திருப்புவனத்தில் நேர்த்திக்கடனுக்காக 200 கிலோ எடை கொண்ட ராட்சத அருவா தயாரிக்கப்பட்டுள்ளது.
மாரநாடு கருப்பண்ணசாமி, மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு பக்தர்கள் சார்பில் நேர்த்திக்கடனாக அருவா தயாரித்து வைப்பது வழக்கம்.திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52,பக்தர் ஒருவரின் வேண்டுகோளின் படி 200கிலோ எடை கொண்ட ராட்சத 18 அடி நீளம் கொண்ட அருவா தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில்; நேர்த்திக்கடனுக்காக ஒரு அடி முதல் 18 அடி வரை அருவா தயாரிப்பது வழக்கம், இந்த அருவா அதிக எடையும், ஒரே இரும்பு பட்டையில் தயாரித்துள்ளோம், 20 நாட்கள் நான்கு பேர் இணைந்து இந்த அருவா தயாரிக்கப்பட்டுள்ளது.18 அடி நீளம் கொண்ட இந்த அருவாவின் தடிமன் 12மி.மீ., மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி கோயிலுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. ராட்சத அருவா தயாரிக்க 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், என்றார்.