திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார்.
வளையல்கள் அணிவிக்கப்பட்டு அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை உள்ளிட்ட பொருட்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள்முன்பு மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. கொரோனா தடையால் அம்பாள் வீதி உலா ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்தார். பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து வளையல் அலங்காரமானது.