ஆடிப்பூரம் அம்மன் கோயில்களில் வழிபாடு வெளியே நின்று தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2021 01:08
ராமநாதபுரம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கொரோனா தடுப்புவிதிமுறை பின்பற்றி ராமநாதபுரம் பகுதியில் உள்ள அம்மன்கோயில்களில் அபிேஷகம், வளையல் அலங்காரத்தில் பூஜைவழிபாடு நடந்தது.
கோயில் வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பெண்கள் வளையல்நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கமாகும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆக., 12 வரைகோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கொரோனா விதிமுறையை பின்பற்றி ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோயில், குண்டுக்கரை காந்தாரி அம்மன் கோயில், பட்டணம்காத்தான் மல்லம்மா கோயில், ரயில்வே பாலம் கீழேயுள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயில்களில் அபிேஷகம் செய்து வளையல்அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தரிசன தடையால் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கோயில் உள்ளே அனுமதிஇல்லாதால் கொரோனா விதிமுறை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வாசலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.