நாகப்பட்டினம்:வேளாங்கண்ணி சர்ச் ஆண்டுத் திருவிழாவில் பொதுமக்களுக்கான தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு: கொரோனா பரவலை தடுக்க வேளாங்கண்ணி சர்ச் ஆண்டு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.சர்ச்சில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காணொலி வாயிலாக ஒளிபரப்பலாம். வேளாங்கண்ணியில் அனைத்து தங்கும் விடுதிகளும் ஆக.29 முதல் செப்.8 வரை திறக்கக் கூடாது. கடைகள் அமைப்பதற்கும், உணவகங்கள் திறக்கவும் அனுமதியில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.