பதிவு செய்த நாள்
13
ஆக
2021
03:08
கிருஷ்ணகிரி: நாக சதுர்த்தியையொட்டி, சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோவிலில் பாலாபிஷேக திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அருகிலுள்ள சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோவிலில், நாக சதுர்த்தியையொட்டி, 13ம் ஆண்டு பாலாபிஷேக திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று காலை, 4:00 மணிக்கு கங்கை பூஜை, கணபதி பூஜை, புன்யாஹ வாசனம், நவகிரக பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, பூர்ண கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நாகம்மாதேவி நாம ஹோமம், காயத்திரி ஹோமம் ஆகியவை நடந்தது. காலை, 8:00 மணிக்கு பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று, நாகம்மா சிலைக்கு பாலாபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபட்டனர். பால்குட ஊர்வலத்தில், காவடியாட்டம், மாடு, மயில் ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் பெண்கள் அம்மன் வேடம் அணிந்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, 12:00 மணிக்கு அனைவருக்கும் அன்னதானமும், வாண வேடிக்கையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சின்னதக்கேப்பள்ளி, பெரிய தக்கேப்பள்ளி, பழையஊர், மாளகுப்பம், கரடிகுறி, கள்ளகுறி, பூசாரிப்பட்டி, போத்திநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.