பெங்களூரு: கொரோனா பீதியின் காரணத்தால், வினாயகர் சதுர்த்தி மற்றும் மொகரம் பண்டிகைகளின் கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. வினாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்:* வினாயகர் சதுர்த்தியை, கோவில்கள், வீடுகளில் மட்டுமே கொண்டாட வேண்டும்.* பொது இடங்கள், திறந்தவெளியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கூடாது.* விநாயகர் சிலை கரைக்க கொண்டு வரும் போது, எந்த விதமான ஊர்வலமோ, நிகழ்ச்சிகளோ நடத்த கூடாது.* சதுர்த்தி கொண்டாடும் கோவில்களில், தினமும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும். கைகளை சுத்தப்படுத்தி கொள்ள, நுழைவு பகுதியில் கிருமி நாசினி மருந்து வைக்க வேண்டும்.* கோவிலுக்கு வரும் பக்தர்கள், முகக்கவசம் அணிந்து கொண்டு, சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும்.
மொகரம் கட்டுப்பாடுகள்: * மொகரம் கூட்டுத்தொழுகை, ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.* பொது இடங்களில் எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.* 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.* சமூக விலகல் கடைபிடித்து மசூதிகளில் தொழுகை நடத்தி கொள்ளலாம்.* பிரார்த்தனைக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். இவ்வாறு கர்நாடக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.