பதிவு செய்த நாள்
14
ஆக
2021
10:08
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் பத்ரகாளியம்மன், வாராஹி அம்மன் உட்பட கோயில்களில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது.
கொரோனா தடை உள்ளதால் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. பக்தர்கள் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.நத்தம் மாரியம்மன் கோவிலில் 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பகவதிம்மன், காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில், பாலநாகம்மன் கோயில், பாரதி நகர் மாரியம்மன் கோவில் உள்பட கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. ஊர்வல கட்டுப்பாடால் பிருந்தாவன தோப்பில் இருந்து கூழ் கலய ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. சில கோயில்களில் பக்தர்கள் கொண்டு வந்த கூழ் வழங்கப்பட்டது. இதுதவிர அம்பாத்துறை காளியம்மன் கோயில், பாலநாகம்மன் கோயில், போக்குவரத்து நகர் பத்ரகாளியம்மன் கோயில்களில், திருமஞ்சனம், பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.