திருப்பூர்: திருப்பூர் சிருங்கேரி சங்கரமடத்தில், ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் பிறந்த நாளையொட்டி, வேத பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளின், 29வது பிறந்த நாள் நிகழ்ச்சி, சிருங்கேரி மடங்களில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் சிருங்கேரி சங்கரமடத்தில், பல்வேறு விசேஷ ேஹாமம் மற்றும் வேதபாராயண நிகழ்ச்சிகள் நடந்தன.ஆயுஷ்ய ேஹாமம், ஆவஹந்தி ஹோமம், நவக்ரஹ ேஹாமம், வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்தன. அதனை தொடர்ந்து, அம்பிகாசுரேஷ் குழுவினரின், லலிதா சஹஸ்ர நாம பாராயண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள், அன்னை சாரதாம்பாள் சிறப்பு தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.