பதிவு செய்த நாள்
14
ஆக
2021
02:08
திருப்பூர்: ஆடிவெள்ளி நிறைவு வாரத்தையொட்டி, அம்மன் கோவில்களில், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.ஆடிமாதம் வெள்ளிக்கிழமை நாட்களில், அம்மன் கோவில்களில் சிறப்பு மஞ்சள் அபிேஷகம், வேப்பிலை அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆடிப்பூரம் வழிபாட்டை தொடர்ந்து, மாரியம்மன் கோவில்களில் நேற்று வளையல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.ஆடி வெள்ளி விரதம் இருந்த பெண்கள், நிறைவு வாரமான நேற்று. எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, துர்க்கையை வழிபட்டனர். கொரோனா தொற்று வேகமாக நீங்கி, உலக மக்கள் சுபிட்ஷம் பெற வேண்டுமென வேண்டி, அம்மனுக்கு எலுமிச்சங்கனி மாலை அணிவித்து வழிபட்டனர்.இந்து சமய அறநிலையத்துறை உத்தரவுப்படி, முக்கியமான அம்மன் கோவில்களில் அதிகாலையில் பூஜை நடந்தது. அதன் பின், பக்தர் தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. நகர்ப்புற கோவில்கள் மூடப்பட்டதால், அருகே உள்ள கிராமப்புற அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகம் இருந்தது.ஆடி வெள்ளி விரதம் இருந்த பெண்களுக்கு, மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம், மல்லிகை பூ, கண்ணாடி வளையல் உள்ளிட்டவை, பிரசாதமாக வழங்கப்பட்டன. மூடப்பட்டிருந்த கோவில்களில், கோவில் கதவு அருகே தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.